35. அருள்மிகு தெய்வநாயகன் கோயில்
மூலவர் தெய்வநாயகன்
உத்ஸவர் மாதவப் பெருமாள்
தாயார் கடல்மகள் நாச்சியார்
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் சோபன புஷ்கரணி
விமானம் சோபன விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருத்தேவனார்தொகை, தமிழ்நாடு
வழிகாட்டி திருநாங்கூர் திவ்யதேசம் என்று அழைக்கப்படுகிறது. சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், திருநாங்கூரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது. திருவாலியிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரம். சீர்காழியிலிருந்தும், திருவெண்காட்டிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
தலச்சிறப்பு

Tirudevanar Gopuram Tirudevanar Moolavarசிவபெருமான் தனது ஏற்படட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட 'ஏகாதச ருத்ர' யாகம் ஒன்றை நடத்தினார். பூர்ணாஹுதி சமயத்தில் மகாவிஷ்ணு பிரம்மாதி தேவர்களுடன் ஸேவை சாதித்தார். சிவபெருமான் வேண்டுகோளுக்கு இணங்க, விஷ்ணு பதினோரு ரூபத்துடன், ருத்திரனுடன் நித்யவாஸம் செய்யும் ஸ்தலம்தான் திருநாங்கூர் திவ்ய தேசங்கள். இவை மொத்தம் 11 கோயில்கள்.

மூலவர் 'தெய்வநாயகன்' என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் மாதவப் பெருமாள். தாயார் 'கடல்மகள் நாச்சியார்' என்றும் உத்ஸவ நாச்சியார் 'மாதவநாயகி' என்றும் வணங்கப்படுகின்றார். வசிஷ்ட மகரிஷிக்கு பகவான் பிரத்யக்ஷம்.

Tirudevanar Utsavarதை மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் நடக்கும் கருடசேவை மிக விசேஷம். திருமணிமாடக் கோயில் வாசலில் 11 திவ்யதேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, அங்கு திருமங்கையாழ்வாருக்கும், அவரது பத்தினி குமுதவல்லிக்கும் மரியாதைகள் நடந்து பின்னர் வீதி புறப்பாடு நடக்கும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணிமுதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com